சுவிஸ் துயர சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட முதல் நால்வர்: பதின்பருவத்தினரும் அடக்கம்
சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் உயிரிழந்த முதல் நான்கு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வாலைஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 40 பேர் பலியாகினர். மேலும் 119 பேர் காயமடைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முதல் நான்கு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் 16 மற்றும் 21 வயதுடைய இரண்டு பெண்கள், 16 மற்றும் 18 வயதுடைய இரண்டு ஆண்கள் என தெரிய வந்துள்ளது.
ஆனால், அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எனினும், அவர்களது உடல்கள் தற்போது அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |