ஒரு மொத்த கிராமத்தையே காலி செய்யும் சுவிஸ் அரசு: பின்னணி
சுவிட்சர்லாந்திலுள்ள, ஒரு கிராமத்திலுள்ள மொத்த மக்களையும் வெளியேற்றுகிறது சுவிஸ் அரசு.
ஒரு மொத்த கிராமத்தையே காலி செய்யும் சுவிஸ் அரசு
சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்திலுள்ள Mitholz என்னும் கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வெளியேற உத்தரவிட்டுள்ளது சுவிஸ் அரசு.
அதற்குக் காரணம், அந்தக் கிராமத்தினருகில் குண்டுகள் கொட்டப்படும் இடம் ஒன்று அமைந்துள்ளது. 1947ஆம் ஆண்டு அந்த இடத்தில் ஒருமுறை குண்டுகள் வெடித்ததில் சிலர் பலியானார்கள்.
அந்த அசம்பாவிதம் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகவே அரசு அந்த கிராமத்தை காலி செய்ய முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பலர் வெளியேறிவிட்ட நிலையில், மீதமிருப்பவர்கள் அனைவரும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு யாரும் மீண்டும் அந்த கிராமத்துகு திரும்ப இயலாது என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதியோர் சிலர், தங்களால் தங்கள் கிராமத்துக்கு திரும்பமுடியாத நிலை ஏற்படலாம் என்பதால் கவலை அடைந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |