இந்த நாட்டு மக்களுக்கு 2023 பிப்ரவரி வரை விசா இல்லாத பயணம் ரத்து: சுவிட்சர்லாந்து அறிவிப்பு
சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் ஒருபகுதியாக செயல்படும் சுவிஸ் பெடரல் நீதி மற்றும் பொலிஸ் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 2015, மே 25க்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் Vanuatu குடியரசின் மக்கள், இனி விசா இல்லாமல் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் என்னவென்றால், Vanuatu குடியரசு, முதலீட்டாளர் குடியுரிமை திட்டம் அல்லது தங்க பாஸ்போர்ட் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருவதுதான். இந்த திட்டத்தின்படி, ஒரு நாட்டில் பெரும் தொகை முதலீடு செய்வோருக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்படும்.
அதில் பிரச்சினை என்னவென்றால், Vanuatu குடியரசு, சரியாக ஒருவரது பின்னணியை ஆராயாமல், வெளிநாட்டவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தெரியவந்துள்ளது. சொல்லப்போனால், இண்டர்போல் பட்டியலில் உள்ள குற்றவாளிகளுக்குக் கூட அந்நாடு பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாம்.
ஆக, அந்த பாஸ்போர்ட் வைத்திருப்போரால் Schengen பகுதிக்குள் விசா இல்லாமல் நுழையமுடியும். ஆகவே, இந்த நபர்களால் Schengen பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் Vanuatu குடியரசு அதிகாரிகளை இது தொடர்பில் எச்சரித்திருந்தார்கள்.
முதலில் அதற்கு இணங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தாலும், பின்னர் 2021இல் மீண்டும் புதிதாக ஒரு குடியுரிமை திட்டத்தை அறிமுகம் செய்துவிட்டார்கள்.
அதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான், தற்போது Vanuatu குடியரசு மக்கள், குறிப்பாக, 2015, மே 25க்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் Vanuatu குடியரசின் மக்கள், சுவிட்சர்லாந்துக்குள் விசா இல்லாமல் நுழைய அளிக்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
இந்த தடை, 2023 பிப்ரவரி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022