மனைவியை கொலை செய்த மருத்துவர்... விடுவித்துள்ள அதிகாரிகள்: பின்னணி
சுவிட்சர்லாந்தில், தன் மனைவியைக் கொலை செய்த மருத்துவர் ஒருவரை அதிகாரிகள் விடுவித்துவிட்டார்கள்.
பின்னணி
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியை கொலை செய்துவிட்டார் மருத்துவர் ஒருவர்.
ஆனால், அவரை அதிகாரிகள் கொலை வழக்கிலிருந்து விடுவித்துவிட்டார்கள்.

காரணம், அவர் REM sleep behavior disorder (RBD) என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
அதாவது, அவர் தூக்கத்திலேயே, தனக்கே தெரியாமல் தன் மனைவியை கொலை செய்துள்ளார். அவருக்கு RBD என்னும் நோய் இருந்ததால், அவர் என்ன செய்கிறார் என அவருக்கே தெரியாது.
ஆகவே, அவர் திட்டமிட்டு தெரிந்தே கொலை செய்யவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
அந்த மருத்துவர் சட்டப்படி தண்டனையிலிருந்து தப்பினாலும், தனது மருத்துவர் உரிமத்தை இழந்துவிட்டார்.
அத்துடன், நீதிமன்ற செலவுகளுக்காக அவர் 30,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |