வாடகை வீடுகளில் குடியிருப்போரை காலி செய்யவைக்க வீட்டு உரிமையாளர்கள் செய்யும் தந்திரம்
சுவிட்சர்லாந்தில், தங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போரை காலி செய்யவைக்க, வீட்டு உரிமையாளர்கள் தந்திரமாக செயல்படுவதாக வாடகை வீடுகளில் குடியிருப்போர் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
வீட்டு உரிமையாளர்கள் கூறும் காரணம்
சுவிட்சர்லாந்தில், தங்கள் வீடுகளில் நீண்ட காலமாக குடியிருப்போரை காலி செய்யவைத்துவிட்டு, வீட்டை அதிக வாடகைக்கு விடுவதற்காக வீட்டு உரிமையாளர்கள் ஒரு தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறார்களாம்.
அதாவது, தங்கள் வீட்டை புதுப்பிக்க வேண்டியிருக்கிறது என்றும், ஆகவே, வீட்டில் குடியிருப்போர் வீட்டை காலி செய்யவேண்டும் என்றும் வீட்டு உரிமையாளர்கள் கோருவதாக அந்த அமைப்பு கூறுகிறது.
சூரிக்கில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13,000 வீடுகளின் வீட்டு ஒப்பந்தங்கள் வீட்டை புதுப்பிக்க இருப்பதாகக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், இப்படி வீட்டை காலி செய்யச் சொல்லும் உரிமையாளர்கள், தங்கள் வீடுகளில் குடியிருப்போர் தங்க மாற்று ஏற்பாடு செய்யவேண்டுமாம். ஆனால், பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்கள் அப்படிச் செய்வதில்லையாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |