தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டசின் கணக்கானோர் மரணமடைந்த இரவு விடுதியின் உரிமையாளர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதனை நிறைந்த
பல பேர்கள் மரணமடைந்துள்ள சம்பவத்தை அடுத்து தங்களால் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாலைஸ் மாகாணத்தின் கிரான்ஸ்-மொன்டானா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது Le Constellation மதுபான இரவு விடுதி. நகரின் மிகப்பிரபலமான இந்த விடுதியிலேயே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதன் அடித்தளம் முழுவதும் தீ பரவத் தொடங்கியது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 40 பேர்கள் வரையில் உடல் கருகி பலியாகியுள்ளனர். 119 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதில் பலரது நிலை மோசமாக உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்தில் கொல்லப்பட்டவர்கள் 40 என சுவிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், இத்தாலிய அதிகாரிகள் 47 என தெரிவிக்கின்றனர். மரணமடைந்தவர்களின் உடல்கள் மிக மோசமான நிலையில் கருகியுள்ளதால், அடையாளம் காணும் பணி தாமதமடைந்துள்ளது.
இதனால், பல குடும்பங்கள் தற்போது வேதனை நிறைந்த காத்திருப்பை எதிர்கொண்டுள்ளன. Le Constellation மதுபான இரவு விடுதியின் உரிமையாளர்கள் பிரெஞ்சு தம்பதியான 49 வயது ஜாக் மோரெட்டி மற்றும் அவரது மனைவி 40 வயது ஜெசிகா என்பது ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்,

கொலைக்குற்றச்சாட்டுகள்
ஜாக் மோரெட்டி முதல் முறையாக நடந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அதில், எங்களால் தூங்கவும் முடியவில்லை, சாப்பிடவும் முடியவில்லை, நாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமுடன் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தங்களின் இரவு விடுதி உரிய அதிகாரிகளால் மூன்று முறை ஆய்வு செய்யப்பட்டதாக மோரெட்டி கூறியுள்ளார். அத்துடன், அனைத்தும் விதிமுறைகளின்படியே முன்னெடுக்கப்பட்டிருந்தது என்றார்.
இந்த நிலையில், வாலைஸ் பிராந்தியத்தின் தலைமை சட்டத்தரணியான பீட்ரைஸ் பில்லூட் தெரிவிக்கையில், அந்தத் தம்பதியினரிடம் அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர், அவர்கள் மீது கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றார்.

ஆனால், அந்தத் தம்பதியினர் சுவிட்சர்லாந்தில் இருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |