85,000 வெளிநாட்டவர்களுக்கு வேலை... வைரலாகிவரும் போலிச் செய்தி
சுவிட்சர்லாந்தில் பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆகவே, அந்நாடு பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுத்துவருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
உண்மை நிலவரம் என்ன?
சுவிட்சர்லாந்தில் பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆகவே, அந்நாடு 85,000 வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுத்துவருவதாகவும், அவர்களுக்கு 3,500 முதல் 6,500 யூரோக்கள் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.

ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை என சுவிஸ் மாகாண பொருளாதாரச் செயலகம் தெரிவித்துள்ளது.
விடயம் என்னவென்றால், இப்போது என்று இல்லை, 2022ஆம் ஆண்டு முதலே இந்த போலிச் செய்தி மீண்டும் மீண்டும் பகிரப்பட்டுவருகிறது.
ஆனால், சில வதந்திகளுக்குப் பின்னால் சில உண்மைகள் இருக்கின்றன, உண்மையில் அவை திரித்து பகிரப்படுகின்றன.
அதாவது, Adecco என்னும் சுவிஸ் மனித வள நிறுவனம், 2027வாக்கில், பல்வேறு நாடுகளிலுள்ள 85,000 அகதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், 17,000 பேருக்கு பயிற்சி வழங்குவதாகவும் உறுதி பூண்டுள்ளது.
ஆனால், இந்த வதந்தியில் கூறப்பட்டுள்ளதுபோல, அது சுவிட்சர்லாந்தில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
அதாவது, சுவிட்சர்லாந்தில் இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது போல் பணியாளர் தட்டுப்பாடும் இல்லை.
ஆக, சம்பந்தமில்லாத வேறொரு விடயத்தை திரித்து யாரோ சுவிட்சர்லாந்தில் பணியாளர் தட்டுப்பாடு என்றும், அதனால் 85,000 வெளிநாட்டவர்கள் வேலைக்கு எடுக்கப்படுவதாகவும் செய்தி வெளியிட, அது உண்மையா என்று தெரியாமலே சமூக ஊடகங்களில் அதை பரப்பிவிட்டார்கள் சிலர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |