ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த சுவிஸ் ஊடகவியலாளர்: ஐந்து ஆண்டுகள் சிறை செல்லும் நிலை
ரஷ்ய உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றிற்குள் நுழைந்ததற்காக, சுவிஸ் ஊடகவியலாளர் ஒருவர் மீது ரஷ்யா கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளது.
எல்லைக்குள் நுழைந்த சுவிஸ் ஊடகவியலாளர்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் Kursk என்னும் நகர எல்லைக்குள் நுழைந்த சுவிஸ் ஊடகவியலாளரான Kurt Pelda என்பவர் மீது ரஷ்ய ரகசிய உளவுத்துறை கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளது.
ரஷ்ய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக Pelda மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Pelda, உக்ரைனிலிருந்து செய்தி சேகரித்து வழங்குவதை வழக்கமாகக் கொண்ட ஊடகவியலாளர் ஆவார்.
இந்நிலையில், அவர் ரஷ்ய எல்லைக்குள் அமைந்துள்ள Kursk என்னும் பகுதிக்குள் நுழைந்ததற்காக அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
விடயம் என்னவென்றால், இந்த Kursk பகுதிக்குள் ஆகத்து மாதம் 6ஆம் திகதி திடீரென உக்ரைன் படைகள் நுழைந்தன.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், வேறொரு நாட்டின் படைவீரர்கள் Kursk பகுதிக்குள் கால் வைப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆனாலும், உக்ரைன் படைவீரர்களிடமிருந்து மீண்டும் Kursk பகுதியைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.
ஆக, இப்படி சர்ச்சையிலிருக்கும் ஒரு பகுதியில் நுழைந்ததால், சிறை செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளார் ஊடகவியலாளரான Pelda.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |