சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கி சுமார் 100 ஆடுகள் பலி
சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கியதில் சுமார் 100 ஆடுகள் பலியானதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின்னல் தாக்கி சுமார் 100 ஆடுகள் பலி
சுவிட்சர்லாந்தின் வாலே மாகாணத்திலுள்ள எக்கர்ஹார்ன் என்னுமிடத்தில், அம்மாகாணத்தின் அடையாளமாக கருதப்படும் கருப்பு மூக்கு செம்மறியாடுகள் இரவு நேரத்தில் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருந்துள்ளன.

வியாழக்கிழமை இரவு புயல் வீச, சில மணி நேரங்களுக்குள் சுமார் 26,000 முறை மின்னல் உருவாக, அந்த மின்னல் தாக்கியதில், கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருந்த 97 ஆடுகள் கொல்லப்பட்டுவிட்டன.
அதாவது, சமீப காலமாக, ஓநாய் போன்ற விலங்குகளிடமிருந்து ஆடுகளை பாதுகாப்பதற்காக, ஆடுகளை கூட்டமாக, நெருக்கமாக கொட்டகைகளில் அடைக்கும் முறையை சுவிஸ் விவசாயிகள் பின்பற்றத் துவங்கியுள்ளார்கள்.
ஆனால், அப்படி ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு நெருக்கமாக நின்றதே ஆடுகளுக்கு பிரச்சினையாகிவிட்டது.
ஆம், மின்னல் தாக்கியதில் ஒன்றையொன்று ஒட்டி நின்ற ஆடுகள் மொத்தமாக பாதிக்கப்பட, 97 ஆடுகள் பலியாகிவிட்டன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |