பணக்கஷ்டத்தை எதிர்கொள்ளும் நடுத்தரவர்க்கத்தினர்: சுவிட்சர்லாந்திலும் இதே நிலைதானாம்
பணக்கார நாடு என கருதப்படும் சுவிட்சர்லாந்திலும், நடுத்தரவர்க்கத்தினர் மாதக்கடைசியில் பணக்கஷ்டத்தை எதிர்கொள்வதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்திலும் இதே நிலைதான்...
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, 4.9 மில்லியன் மக்கள் நடுத்தரவர்க்கத்தினர் என்னும் வகைப்பாட்டின் கீழ் வருகிறார்கள்.

மாதம் 4,228 முதல் 9,061 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறும் தனி நபர்களும், 8,800 முதல் 19,028 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறும், 14 வயதுக்குக் கீழுள்ள இரண்டு பிள்ளைகளைக் கொண்ட தம்பதியரும் நடுத்தரவர்க்கத்தினர் என்னும் வகைப்பாட்டின் கீழ் வருகிறார்கள்.
ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், இந்த நடுத்தரவர்க்கத்தினரில் 10.5 சதவிகிதத்தினர், அதாவது, சுமார் 240,000 பேர், தங்கள் வருவாயில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பணத்தை வாடகை முதலான விடயங்களுக்காகவே செலவிடுவது தெரியவந்துள்ளது.
மேலும் 320,000 பேர், மாதக்கடைசியில் பணக்கஷ்டத்தை எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அத்துடன், சுமார் 260,000 பேர், பணக்கஷ்டம் காரணமாக சுற்றுலா செல்வதைத் தவிர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். பணக்கார நாடு என பலரும் கருதும் சுவிட்சர்லாந்திலேயே இப்படி ஒரு நிலை காணப்படுவது ஆச்சரியம்தான்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |