ஞாயிற்றுக்கிழமைகளில் கடைதிறப்பு... சுவிஸ் அரசின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்
ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறப்பு தொடர்பில் ஃபெடரல் அரசு முன்வைத்துள்ள திட்டம் தொடர்பில், மாகாணத்துக்கு மாகாணம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ஞாயிற்றுக்கிழமைகளில் கடைதிறப்பு...
சுவிட்சர்லாந்தில், தற்போது, ஆண்டுக்கு நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே கடைகள் திறந்திருக்கும் நிலையில், ஆண்டுக்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் திறந்திருக்கும் வகையில் விதிமாற்றம் செய்ய ஃபெடரல் அரசு திட்டமிட்டு வருகிறது.

அரசின் திட்டத்துக்கு சில்லறை வியாபாரிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறப்பு தொடர்பில் ஃபெடரல் அரசு முன்வைத்துள்ள திட்டம் தொடர்பில் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
அரசின் திட்டத்துக்கு Vaud மாகாணம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விடயம் தொடர்பில் மாகாணங்கள் முடிவு எடுக்கவேண்டும் என்றும், என்றாலும், தங்கள் மாகாணம் என்ன செய்யப்போகிறது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அம்மாகாணம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவும் அரசின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், Neuchâtel, லோசான் மாகாணங்களும், பல தொழிலாளர் யூனியன்களும், 12 ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் திறந்திருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறப்பது கடைகளில் வேலை செய்வோரின் உடல் நலனுக்கும், அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் எதிர்ப்பு தெரிவிப்போர்.
ஆனால், அரசின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்போரோ, அது சுற்றுலாவை வலுப்படுத்தும் என்றும், உணவகங்களுக்கும் கலாச்சார மையங்களுக்கும் கூடுதல் வருவாயை உருவாக்கும் என்றும் கூறுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |