அமெரிக்கா- ஈரான் இடையே இறுதி ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முக்கிய முடிவு
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள சுவிட்சர்லாந்து தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும் நீண்டகால அமைதி ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கான மையமாக திகழ சுவிட்சர்லாந்து தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவும், ஈரானும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து அமைதி ஒப்பந்தத்திற்கு முன் வந்தால் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்தி தர சுவிட்சர்லாந்து தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இருதரப்புக்கும் இடையிலான போர் பதற்றத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வந்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒப்பந்தத்தை உருவாக்க சுவிட்சர்லாந்து தீவிரமான களமிறங்கியுள்ளது.
இதற்காக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் தரப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு தரப்பிற்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கும் முக்கிய பாலமாக சுவிட்சர்லாந்து செயல்பட்டு வருகிறது.

ஜெனிவாவில் புதிய ஒப்பந்தம்
அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்தம் ஜெனிவாவில் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை இரு தரப்புக்கும் இடையே இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டால் பாகிஸ்தான் ஜனாதிபதி ஷெபாஸ் ஷெரீப் உட்பட பல உலகத் தலைவர்கள் ஜெனிவாவிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |