சுவிட்சர்லாந்தில் கடுமையாக்கப்படும் பாலியல் சட்டங்கள்: நாடாளுமன்ற வாக்கெடுப்பில் முக்கிய முடிவு
சுவிட்சர்லாந்தில் தற்போது உள்ள பாலியல் வன்கொடுமை சட்டங்களை மேலும் கடுமையாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் திங்கட்கிழமையன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் இன்றைய நிலை
சுவிட்சர்லாந்தின் இன்றைய சட்டத்தின் படி, பெண் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியும், கட்டாயமான அந்தரங்க உறுப்பு ஊடுருவல் மட்டுமே பாலியல் வன்கொடுமையாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் அதன் தற்போதைய பாலியல் வன்கொடுமை சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும் என்ற பரந்த கருத்து உடன்பாடு நாடு முழுவதும் பரவி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு திங்கட்கிழமையான நேற்று சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் ஒப்புதல் இல்லாமல் அனைத்து பாலினங்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்கொடுமை பற்றிய சட்டங்களை முந்தைய சட்டங்களில் இருந்து வியத்தகு முறையில் விரிவுபடுத்துவது கருத்தில் கொள்ளப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் பாலியல் உறவுக்கு “ஆமாம் என்றால் மட்டுமே ஆம்” என்று முடிவுக்கு 99 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 88 உறுப்பினர்கள் எதிராகவும், வாக்களித்துள்ளனர், மூன்று பேர் வாக்களிக்கவில்லை.
புதிய சட்டம்
பாதிக்கப்பட்டவரின் பாலினத்தை பொருட்படுத்தாமல், அவர்கள் பாலியல் சீண்டல்களை எதிர்த்தார்களா என்பதை பொறுத்து, பாலியல் வன்கொடுமையின் வரையறையை அனைத்து சம்மதமற்ற ஊடுருவல்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்த வேண்டும் என்பது சுவிட்சர்லாந்து நாட்டில் பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.
நாட்டின் நாடாளுமன்ற மேலவையில் மாநிலங்கள் கவுன்சில் இந்த அணுகுமுறை குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தி இருந்த நிலையில், கீழ் சபையின் தேசிய கவுன்சிலில் திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
Reuters
இதில் பாலியல் செயல்களுக்கு வெளிப்படையான ஒப்புதல் தேவைப்படும் என்ற தீவிரமான மாற்றத்தைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் இந்த சட்ட மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு வெகு காலம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த வாக்கெடுப்பை "பல ஆண்டுகளாக பெண்கள், பாலியல் துஷ்பிரயோகம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான ஆர்வலர் நடவடிக்கைகளுக்குப் பிறகு கிடைத்த மாபெரும் வெற்றி" என்று பாராட்டியது.