ட்ரம்ப் ஆதரவு: டெஸ்லா நிறுவனத்தை புறக்கணிக்கும் சுவிஸ் மக்கள்
உலக நாடுகள் பலவற்றில் ட்ரம்ப் வெறுப்பு அதிகரித்துவருகிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
ஆம், ட்ரம்புடன் தொடர்புடையவர் என்ற ஒரே காரணத்துக்காகவே, எலான் மஸ்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தைப் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துவருகிறார்கள்.
டெஸ்லா நிறுவனத்தை புறக்கணிக்கும் சுவிஸ் மக்கள்
சுவிட்சர்லாந்திலும் டெஸ்லா கார் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
சென்ற மாதம் மிகச்சில டெஸ்லா கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட இப்போது டெஸ்லா கார் விற்பனை 67 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கார் நிறுவனங்களின் போட்டியும் டெஸ்லா கார் விற்பனை குறைவடையக் காரணம் என துறைசார் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
என்றாலும், டெஸ்லா கார் வைத்திருப்பதை மக்கள் பார்க்கும் விதம் தற்போது மாறியுள்ளதாகவும், எலான் மஸ்குடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக மற்றவர்கள் நினைக்கக்கூடாது என பலர் கருதத் துவங்கியுள்ளதாகவும் துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆக, ட்ரம்புடன் தொடர்புடைய எலான் மஸ்குக்கு சொந்தமான நிறுவனம் என்பதே டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் விற்பனை வீழ்ச்சியடைய முக்கியக் காரணம் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |