சுவிட்சர்லாந்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வந்த குறுஞ்செய்தி: ஒரு எச்சரிக்கை செய்தி
Thousands of Swiss phone users have received a genuine activation code, part of a multi-step scam: பல்லாயிரக்கணக்கான சுவிஸ் மக்களை இலக்கு வைத்து வங்கி மோசடி ஒன்று துவங்கியுள்ளதாக அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில் UBS வங்கி வாடிக்கையாளர்கள் பல்லாயிரக்கணக்கானோருக்கு இரவு நேரத்தில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது.
ஒரு எச்சரிக்கை செய்தி
விடயம் என்னவென்றால், அது உண்மையாகவே UBS வங்கியின் ஆக்டிவேஷன் கோட்தான் (activation code).
அதாவது, ஹேக்கர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஆப்பை (App) தூண்டும் வகையில் ஒரு செயலைச் செய்கிறார்கள்.

அதன் மூலமாக, வங்கியிலிருந்தே ஒரு ஒரு ஆக்டிவேஷன் கோட் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு வருகிறது.
பெரும்பாலும் இரவு நேரங்களில் அந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழைப்பு வருகிறது. தூக்கக் கலக்கத்திலிருக்கும் அவர்களிடம், தங்களை வங்கியின் மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரி போல காட்டிக்கொண்டு, உங்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முயற்சி நடக்கிறது என்றும், அதன் காரணமாக ஒரு ஆக்டிவேஷன் கோட் வந்துள்ளது என்றும் மோசடியாளர்கள் கூறுவார்கள்.
வாடிக்கையாளர் தன் மொபைலை சோதிக்க, அங்கு உண்மையாகவே வங்கியிருந்து ஒரு ஆக்டிவேஷன் கோட் வந்திருக்க, அதிர்ச்சியடைவார் அவர்.
அவரது பதற்றத்தைப் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கணக்கைக் காப்பாற்றவேண்டுமானால் அந்த ஆக்டிவேஷன் கோடைச் சொல்லுமாறு மோசடியாளர் கேட்பார்.
அதில் சந்தேகப்படும்படி எதுவுமே இல்லை என்பதால், வாடிக்கையாளர் ஆக்டிவேஷன் கோடைச் சொல்ல, அதைப் பயன்படுத்தி, வாடிக்கையாளரின் பணத்தைச் சுருட்டிவிடுவார் மோசடியாளர்.
விடயம் என்னவென்றால், இதை மோசடி என கண்டுபிடிப்பதே கடினம்!
ஆக, இப்படி ஒரு மோசடி நடக்கிறது என்று கூறி, அப்படி ஏதாவது ஆக்டிவேஷன் கோட் வந்தால், அதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்றும், அத்தகைய அழைப்புகளை அலட்சியம் செய்யுமாறும் UBS வங்கி அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.