அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள்: சுவிஸ் ராணுவத்தின் அதிரடி திட்டம்
உலகில் அதிகரித்துவரும் சைபர் தாக்குதல்கள், கலப்புப் போர்முறை மற்றும் தொலைதூரத் தாக்குதல்கள் முதலான அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப சுவிஸ் ராணுவம் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும் என சுவிட்சர்லாந்தை ஆளும் ஃபெடரல் கவுன்சில் கூறுகிறது.
சுவிஸ் ராணுவத்தின் திட்டம்
உலகில் நிலவிவரும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தன்னைத் தயார் செய்துகொள்வதற்காக, 2028வாக்கில் ட்ரோன்கள் மற்றும் ரோபோ படையினரை உருவாக்க தயாராகிவருகிறது சுவிஸ் ராணுவம்.

ஆகவே, ராணுவத்துக்கான முதலீட்டில் சுமார் 80 சதவிகிதத்தை வான்வெளிப் பாதுகாப்பு, ட்ரோன் மூலமான பாதுகாப்புத் திறன் மற்றும் உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காக செலவிடுவதென திட்டமிடப்பட்டுவருகிறது.
இதுவரை வெறும் பயிற்சியிலேயே இருந்துவிட்ட சுவிஸ் ராணுவத்தை, போரிடத் தயார் நிலையிலுள்ள படையாக மாற்றுவதே நோக்கம் என்கிறார் சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான மார்ட்டின் (Martin Pfister).

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |