சுவிட்சர்லாந்திலுள்ள சிறிய ரயில் நிலையங்களுக்கு ஆபத்து?
சுவிட்சர்லாந்தில் ரயில்களின் வேகம் குறைவதற்கு காரணமாக இருக்கும் சிறிய ரயில் நிலையங்கள் மூடப்படலாம் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
சிறிய ரயில் நிலையங்களுக்கு ஆபத்து?
சுவிஸ் ஃபெடரல் ரயில்வேயின் தலைவரான மோனிகா (Monika Ribar), ரயில்கள் வேகமாக இயங்கவேண்டும் என்பது தனது நோக்கம் என்று கூறியுள்ளார்.
சிறிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வதால், மொத்த ரயில் பயணமும் வேகம் குறைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒரு ரயில் நிலையத்தை மூடவேண்டுமானால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்.
அதாவது, ஒரு ரயில் பயணி 15 நிமிடங்களில் ஒரு ரயில் நிலையத்தை அடைந்து ரயிலைப் பிடிக்க வசதியாக, ட்ராம் அல்லது பேருந்து சேவை ஏற்பாடு செய்தால்தான் ரயில் நிலையங்களை மூடவேண்டும் என விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |