ஒரு வருடத்திற்கு முன் வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிரபல சுவிஸ் அரசியல்வாதிக்கு மீண்டும் கொரோனா!
சுவிட்சர்லாந்தின் Free Democratic கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி Nathalie Fontanet (56) இரண்டாவது முறையாக கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜெனீவா நகரின் நிதி அமைச்சரான Nathalie Fontanet ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார், பின்னர் சிகிச்சை பின் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
நேற்று முதல் காய்ச்சல் அடிப்பதாக Nathalie Fontanet பேஸ்புக்கில் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
முடிந்தவரை வீட்டிலிருந்த படி பணிகளை தொடர்வேன் என Fontanet தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய Fontanet, நிலைமை மிகவும் மோமாகவிட்டன என நான் நினைத்தேன், அதற்கு முதன்மையான காரணம் மனஅழுத்தம் தான் என கூறினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.