பதவிக்காக பிரித்தானிய குடியுரிமையை மறைத்தாரா சுவிஸ் அரசியல்வாதி?: உருவாகியுள்ள சர்ச்சை...
சுவிஸ் நிதி அமைச்சர் இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
அவரது இடத்துக்கு இப்போதே போட்டி ஆரம்பித்தாயிற்று.
சுவிஸ் நிதி அமைச்சரான Ueli Maurer இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு இப்போதே போட்டி ஆரம்பித்தாயிற்று.
போட்டியில் களமிறங்கியுள்ளவர்களில் Michèle Blöchliger என்பவரும் ஒருவர்.
ஆனால், அவர் தனது இரட்டைக் குடியுரிமையை ஒப்புக்கொள்ளவில்லை என்னும் விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
Michèle விக்கிபீடியாவில் தன்னைக் குறித்து தெரிவிக்கும்போது, தான் சுவிஸ் மற்றும் பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், சமீபத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றின்போது அவரது இரட்டைக் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, தான் பிரித்தானியக் குடியுரிமை கொண்டவர் என்பதை தீவிரமாக மறுத்தார் Michèle. ஆனால், Michèleஇன் தாய் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்,அவரது இரண்டாவது மொழி ஆங்கிலம்!
இந்நிலையில், புதன்கிழமையன்று, தான் சுவிஸ் மற்றும் பிரித்தானியக் குடியுரிமை கொண்டவர்தான் என்று கூறியுள்ளார் Michèle. தனது பிரித்தானியக் குடியுரிமையை தனது தாயிடமிருந்து தான் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், Michèle தனது பிரித்தானியக் குடியுரிமை குறித்து மாற்றி மாற்றி பேசியதை வைத்து ட்விட்டரில் அவரை கேலி செய்துள்ளார்கள் மக்கள். பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், Michèle தனது பிரித்தானிய குடியுரிமையைப் பயன்படுத்தி பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ஆவாரா?என கேலியாக கேள்வி எழுப்பியுள்ளார் ஒருவர்!