சுவிஸ் ஜனாதிபதி ராஜினாமா: பின்னணி
Swiss President Guy Parmelin to step down: சுவிஸ் ஜனாதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதியான கய் பார்மலின், தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னணி
பார்மலின், உடல் நல பாதிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என நீண்ட நாட்களாகவே வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில், நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசிய பார்மலின், தான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
என்றாலும், அதற்குக் காரணம் தன் உடல் நலம் அல்ல என்று கூறியுள்ள பார்மலின், இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பதற்காகவே தான் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஃபெடரல் கவுன்சில் என்னும் ஏழு உறுப்பினர்கள் கொண்ட அமைப்பே நாட்டை ஆள்கிறது.
அந்த அமைப்பில் உள்ள ஏழு உறுப்பினர்களும் மாறி மாறி ஜனாதிபதி பதவியை வகிப்பார்கள். அதாவது, ஆண்டுக்கு ஒருவர் ஜனாதிபதி பொறுப்பு வகிப்பார்.
அவ்வகையில், 11 ஆண்டுகளாக அரசில் பங்கு வகிக்கும் பார்மலின், தற்போது ஜனாதிபதி பொறுப்பை வகிக்கிறார்.
இந்நிலையில், தான் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், என்றாலும், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி, இரவு 11.59 மணி வரை தான் வேலை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பார்மலின்.
2015ஆம் ஆண்டு அரசில் இணைந்த பார்மலின், முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், பின் நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
இரண்டாவது முறை ஜனாதிபதி பொறுப்பு வகிக்கும் பார்மலின், நாட்டின் நலனுக்காக பல சாதனைகளை புரிந்துள்ளதுடன், கோவிட் காலகட்டத்தைத் திறம்படக் கையாண்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.