சுவிட்சர்லாந்தில் வாடகைக்கு எடுத்த கார் பிரித்தானியாவில் சிக்கியது: வெளிநாட்டவருக்கு சிறை
கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர் சுவிட்சர்லாந்தில் வாடகைக்கு எடுத்த கார் ஒன்று, பிரித்தானியாவில் சிக்கிய நிலையில், அவருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாடகைக்கு எடுத்த கார்...
கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர், சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் ஒரு BMW காரை வாடகைக்கு எடுத்துள்ளார்.

ஆனால், அந்தக் காரை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை, அத்துடன், அவர் எங்கேயே மாயமாகிவிட்டார்.
இந்நிலையில், அந்தக் கார், பிரித்தானியாவிலுள்ள Tilbury துறைமுகத்தில் ஒரு கண்டெய்னருக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. அது, கானா நாட்டுக்கு அனுப்பப்பட இருந்தது.
இந்த விடயம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டபோது, தான் பார்க் செய்திருந்த அந்தக் கார் காணாமல் போய்விட்டதாகவும், தனக்கும் அந்தக் கார் காணாமல் போனதற்கும் சம்பந்தம் இல்லை என்றும்கூறியிருந்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவர் மாயமாகிவிட்டார். அவர் கூறுவதுபோல கார் காணாமல் போயிருந்தால், அப்போதே அவர் பொலிசில் புகாரளித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள், ஆனால், அவர் பொலிசில் புகாரளிக்கவில்லை என்றும், அத்துடன், அந்தக் கார் கானாவுக்கு அனுப்பப்பட இருந்தது தெரியவந்துள்ளதால் அது தற்செயலாக நடந்தது என நம்பத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, அவருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்கள் நீதிபதிகள். விடயம் என்னவென்றால், அந்த நபர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது!
அவர் இல்லாமலேதான் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |