உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள்: சுவிஸ் நிறுவனத்தின் சோதனை முயற்சி
சுவிஸ் நிறுவனம் ஒன்று உணவு டெலிவரி செய்ய ரோபோக்களை பயன்படுத்தும் சோதனை முயற்சியைத் துவங்க உள்ளது.
உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள்
உணவு டெலிவரி செய்யும், உலகின் மிகப்பெரிய நிறுவனம் Just Eat Takeaway. அந்நிறுவனம், உணவு டெலிவரி செய்ய ரோபோக்களை பயன்படுத்துவதற்காக சுவிஸ் நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளது.
சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETHZஇன் கிளை நிறுவனமான RIVR என்னும் நிறுவனம், சுவிட்சர்லாந்தில் உணவு டெலிவரி செய்ய ரோபோக்களை பயன்படுத்தும் சோதனை முயற்சிகளை மேற்கொள்வதற்காக Just Eat Takeaway நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
RIVR நிறுவனத்தின் ரோபோக்கள் கைகள் கால்களுடன் சக்கரமும் இணைக்கப்பட்டவை. அவை படிகளில் ஏறி வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் திறன் கொண்டவை என்கிறது RIVR நிறுவனம்.
முதல் 30 நாட்களுக்கு அந்த ரோபோக்கள் நெருக்கமாக கண்காணிக்கப்பட இருக்கின்றன. அதன் பின், அவை தொலைவில் அமைந்துள்ள ஒரு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும்.
விடயம் என்னவென்றால், இப்படி இத்தகைய வேலைகளுக்கு ரோபோக்களை பயன்படுத்துவதால் மக்கள் பலருக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதை மறுப்பதற்கில்லை.
சமீபத்தில், ஷூ தயாரிப்பு நிறுவனமான On என்னும் சுவிஸ் நிறுவனம், முழுவதுமாக ரோபோக்களால் இயங்கும் தனது தொழிற்சாலை ஒன்றைத் திறந்துள்ளது.
அந்த தொழிற்சாலையில் 300 பேர் செய்யக்கூடிய வேலையை மூன்று நிமிடத்தில் ஒரு ரோபோ செய்து முடித்துவிடும் என அந்த நிறுவனம் பெருமையாக கூறியிருந்ததை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |