புலம்பெயர்தல் வரி... ஆதரவாக வாக்களித்துள்ள சுவிஸ் நாடாளுமன்றம்
Swiss Upper house has voted to introduce a new incentive tax on immigration: சுவிஸ் நாடாளுமன்றத்தின் மேலவை, புலம்பெயர்தல் தொடர்பில் புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
உலக நாடுகள் சிலவற்றைப்போல சுவிட்சர்லாந்தும் புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
புலம்பெயர்தல் வரி...
அவ்வகையில், சுவிஸ் நாடாளுமன்றத்தின் மேலவை, புலம்பெயர்தல் தொடர்பில் புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

.அடுத்ததாக இந்த வரி தொடர்பிலான மசோதா, நாடாளுமன்றத்தின் கீழவையில் விவாதத்துக்கு வரும்.
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இந்த வரி தொடர்பில் ஒரே முடிவை எடுக்கும் நிலையில், இறுதியாக, சுவிஸ் மக்கள் இந்த வரி தொடர்பில் வாக்களித்து முடிவு செய்வார்கள்.
இந்த புதிய புலம்பெயர்தல் வரி என்பதில், வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் பணி செய்யும் நிலையில், அவர்களை பணிக்கமர்த்திய நிறுவனத்திடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிப்பது, சுவிட்சர்லாந்தில் பணி செய்யும் வெளிநாட்டவர்களின் குடும்பத்தினரும் சுவிட்சர்லாந்தில் வாழ வரும் நிலையில், அவர்களுக்கு ஒரு வரி விதிப்பது போன்ற விடயங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.