திடீரென உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் சுவிட்சர்லாந்து... காரணம் இதுதான்
சுவிட்சர்லாந்து திடீரென செய்திகளில் உலகின் கவனம் ஈர்த்துள்ளது. அதற்கு காரணம், ஜெனீவாவில் இரண்டு முக்கிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதுதான்.
இம்மாதம் (ஜூன்) 16ஆம் திகதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திக்கும் உச்சி மாநாடு ஒன்று சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் நடைபெற உள்ளது.
ஜெனீவாவிலுள்ள 18ஆம் நூற்றாண்டு கால கட்டிடம் ஒன்றில் ஜோ பைடனும் புடினும் சந்தித்துப் பேச இருக்கிறார்கள். இதுவரை இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் பல்வேறு காரணங்களுக்காக கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், தற்போது இருவரும் முதன்முறையாக முகமுகமாக சந்தித்துக்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனதிபதி தேர்தலில் தலையிட்டது, சைபர் தாக்குதல் என ரஷ்யா மீது
பல்வேறு குற்றச்சாட்டுகள் அமெரிக்கா தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட நிலையில்,
இந்த உச்சி மாநாடு இருதரப்பு உறவுகளுக்கு மிகவும் இன்றியமையானது என நிபுணர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர்.