இலங்கையில் சுவிஸ் சுற்றுலா பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி: பொலிஸார் எடுத்த துரித நடவடிக்கை

Sri Lanka Tourism Sri Lanka Tourism Switzerland
By Thiru Mar 11, 2026 12:00 AM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டவர் தனது ஐபோனை பேருந்தில் தவற விட்ட நிலையில் 10 நிமிடத்தில் அதை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஐபோனை தவறவிட்ட சுவிஸ் நாட்டவர்

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஜியான் முல்லர், இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளார்.

அப்போது கண்டி நகரில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற பேருந்தில் முல்லர் பயணித்த நிலையில் மாலை 6.30 மணியளவில் தம்புள்ளை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.

இலங்கையில் சுவிஸ் சுற்றுலா பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி: பொலிஸார் எடுத்த துரித நடவடிக்கை | Swiss Tourist Missed His Iphone In Sri Lanka

பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திற்கு பிறகே தன்னுடைய ஐபோன்(iPhone) காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அருகில் தம்புள்ளை நகரில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்டை முல்லர் உதவிக்காக நாடியுள்ளார்.

வட கொரியா - சீனா இடையே மீண்டும் ரயில் சேவை: வெளியான முக்கிய அறிவிப்பு

வட கொரியா - சீனா இடையே மீண்டும் ரயில் சேவை: வெளியான முக்கிய அறிவிப்பு

முல்லரின் பயணச்சீட்டு விவரங்களை வைத்து சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமையாளரை தொடர்பு கொண்ட பொலிஸ் சார்ஜன்ட், பின்னர் அந்த பேருந்தின் CCTV கேமராக்களைச் சோதிக்குமாறு அறிவுறுத்தினார்.

நல்ல வேளையாக முல்லரின் ஐபோன் அதே பேருந்தில் இருந்திருக்கிறது, மேலும் ஓட்டுநர் அந்த ஐபோனை தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறோம் என பொலிஸ் சார்ஜன்ட்டிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இலங்கையில் சுவிஸ் சுற்றுலா பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி: பொலிஸார் எடுத்த துரித நடவடிக்கை | Swiss Tourist Missed His Iphone In Sri Lanka

கண்ணீர் விட்ட சுவிஸ் நாட்டவர்

காவல் நிலையத்தில் தன்னுடைய ஐபோனை திரும்ப பெற்ற சுவிஸ் நாட்டு சுற்றுலா பயணி முல்லர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டுள்ளார்.

தன்னுடைய கற்றல் பணி தொடர்பான முக்கியமான கோப்புகள் இதில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விரைவான உதவி செய்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் தம்புள்ளை தலைமையக பொலிஸார் ஆகியோருக்கு முல்லர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும் அதிகாரிகளுக்கு பரிசாக முல்லர் பணம் வழங்கிய போது அதனை பொலிஸார் மறுத்ததுடன், இது எங்களுடைய கடமை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US