வட கொரியா - சீனா இடையே மீண்டும் ரயில் சேவை: வெளியான முக்கிய அறிவிப்பு
வட கொரியா - சீனா இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
மீண்டும் ரயில் சேவை
எதிர்வரும் வியாழக்கிழமை முதல் சீனாவிற்கு வட கொரியாவிற்கு இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்த ரயில் சேவை பிஜிங்கில் இருந்து பியாங்யாங் நகருக்கான சேவையாக தொடங்கப்படும் என்று சீனா அரசு தெரிவித்துள்ளது.

முன்பே சீனாவுக்கும், வடகொரியாவிற்கும் இடையே பயணிகள் ரயில் சேவை இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வாரத்திற்கு நான்கு முறை இந்த ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி ரயில் சேவை சீனாவின் எல்லையோர நகரான டான்டோங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் வரை இயக்கப்படும் என்று சீனாவின் ரெயில்வே ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |