சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்ட ஒரு அருமையான போக்குவரத்து திட்டம்: ஆனால்
சுவிட்சர்லாந்தில் ஒரு அருமையான போக்குவரத்து திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அது தடைபட்டு நிற்கிறது.
ஒரு அருமையான போக்குவரத்து திட்டம்
சுவிட்சர்லாந்தில், Cargo Sous Terrain என்னும் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. அதாவது, கனரக வாகனங்களான லொறி போன்ற வாகனங்களை பூமிக்கடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதைகளில் பயணிக்கச் செய்வதுதான் அந்த திட்டம்.
கனரக வாகனங்கள் சுரங்கப்பாதைகளில் செல்லும்போது சாதாரண சாலைகளில் போக்குவரத்து எளிதாகும் என்பதற்காக இப்படி ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் அது தடைபட்டு நிற்கிறது. முக்கியமாக, இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்குவதில் பிரச்சினை உள்ளது. சில மாகாண மற்றும் நகர அரசுகள் இத்திட்டம் தொடர்பில் சில விடயங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளன.
இப்படி போக்குவரத்துக்காக சுரங்கப்பாதை அமைப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படலாம் என்றும், சுரங்கப்பாதையும் சாலையும் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்றும், சுரங்கப்பாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட மண்ணை எங்கு கொட்டுவது என்பது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் மீளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மீளாய்வின் முடிவுகளும் சுரங்கப்பாதை திட்டத்துக்கு சாதகமாக இல்லாததால், பிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |