சுவிஸ் விசா நிராகரிக்கப்பட்டதால் தேனிலவுக்காக காஷ்மீருக்கு சென்ற தம்பதி: கண்ணீரில் குடும்பம்
சுவிட்சர்லாந்துக்கு தேனிலவுக்காக செல்ல திட்டமிட்டிருந்த இந்திய தம்பதிக்கு விசா கிடைக்காததால் அவர்கள் காஷ்மீருக்கு செல்ல, தீவிரவாதிகள் அந்த இளம்பெண்ணை விதவையாக்கிவிட்டார்கள்!
சுவிஸ் விசா நிராகரிப்பு
திருமணமாகி ஆறு நாட்களே ஆன நிலையில், சுவிட்சர்லாந்துக்கு தேனிலவுக்காக செல்ல திட்டமிட்டிருந்தனர் கடற்படை வீரரான வினயும் (Lieutenant Vinay Narwal) அவரது மனைவியான ஹிமான்ஷியும் (Himanshi Sowami).
ஆனால், அவர்களுக்கு சுவிஸ் விசா கிடைக்கவில்லை. ஆகவே, அதற்கு பதிலாக காஷ்மீருக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர் தம்பதியர்.
மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், புல்வெளியில் அமர்ந்து தம்பதியர் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, தீவிரவாதிகள் வினயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
தேனிலவுக்காக சென்ற இடத்தில் கணவன் கொல்லப்பட, அவரது மனைவி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார், இருவரது குடும்பங்களும் கண்ணீரில் ஆழ்ந்துள்ளன.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை
இதற்கிடையில், தன் பேரனுக்கு மட்டும் சுவிஸ் விசா கிடைத்திருந்தால் அவர் இப்போது உயிருடன் இருந்திருப்பார் என்கிறார் வினயின் தாத்தாவான ஹவா சிங்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |