போலி பணி அனுமதிகள்... சுவிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில், போலி பணி அனுமதிகளுடன் பணி செய்துவந்த சுமார் 1,500 பேர் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து, அது தொடர்பில் சுவிஸ் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
சிக்கிய போலி பணி அனுமதிகள்
சுவிட்சர்லாந்தில், 2025ஆம் ஆண்டில் மட்டும், போலி பணி அனுமதிகளுடன் பணி செய்துவந்த சுமார் 1,456 வெளிநாட்டவர்கள் ஃபெடரல் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்கள்.

மேலும், போலி பணி ஒப்பந்தங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலி அடையாள அட்டைகள் புழக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் சுவிஸ் அதிகாரிகள் வெளிநாட்டவர்களை எச்சரித்துள்ளார்கள்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது அல்லது சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்தில் பணி செய்வது ஆகிய குற்றங்களுக்கு கடும் அபராதம், சிறை மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஷெங்கன் பகுதிக்குள் நுழையத் தடை முதலான தண்டனைகள் விதிக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |