குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை... சுவிஸ் பெண்கள் பலரது முடிவு
சுவிஸ் நாட்டுப் பெண்கள் பலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லையாம்.
குழந்தை வேண்டாம்...
சுவிஸ் பெண்களில், 18 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 63 சதவிகிதத்தினருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை என ஃபெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள் கூறுகின்றன.
அதற்கு காரணம், பணம் இல்லை! நிதி உதவிகளும், வரி தள்ளுபடிகளும் வழங்கியும் பெண்கள் மனதை மாற்றமுடியவில்லை.
இன்றைக்கு உலகம் இருக்கும் நிலையில், கவலைப்பட வேறு விடயங்கள் இருக்கின்றன, இதில் குழந்தை வேறு பெற்றுக்கொள்வதா என்கிறார்கள் பெண்கள்.
விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும், மற்ற நாடுகளிலும் பிறப்பு வீதம் குறைந்துகொண்டே வருகிறது.
இப்படியே போனால், ஜப்பான் நாட்டிலெல்லாம் அடுத்த மூன்று தலைமுறைகளுக்குப் பின் ஆட்களே இருக்கமாட்டார்கள் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |