சுவிட்சர்லாந்து எகிப்து நாடுகளுக்கிடையே புலம்பெயர்தல் ஒப்பந்தங்கள்
சுவிட்சர்லாந்தும் எகிப்தும், புலம்பெயர்தல் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
புலம்பெயர்தல் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்கள்
எகிப்து நாட்டுக்குச் சென்ற சுவிஸ் நீதித்துறை அமைச்சரான பீட் ஜான்ஸ் (Beat Jans)ம், எகிப்து வெளியுறவு அமைச்சரான Badr Abdelattyயும், புலம்பெயர்தல் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் ஊடகவியலாளர்களை சந்தித்த பீட் ஜான்ஸ், இது இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் புதிய கட்டத்தின் துவக்கத்தின் அடையாளம் என்றார்.
இந்த ஒப்பந்தங்களில் ஒன்று, எகிப்தை அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாடு என்ற வகையில் அதற்கு அளிக்கப்படும் ஆதரவை வலுப்படுத்துவதையும், சட்டப்பூர்வ புலம்பெயர்தல், ஆட்கடத்தலுக்கு எதிரான போராட்டம், மீண்டும் குடியேற்றம் மற்றும் தானே முன்வந்து சொந்த நாட்டுக்குத் திரும்புதல் போன்ற பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்துவதையும் சார்ந்த ஒப்பந்தமாகும்.
இரண்டாவது ஒப்பந்தம் தூதரக அதிகாரிகளுக்கு விசா இல்லாத பயணத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |