பிரித்தானிய தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்தும் தடை: அதிர்ச்சியளித்துள்ள ஒரு முடிவு
பிரித்தானிய தயாரிப்பான ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்து தடை விதித்துள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்வீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பரிந்துரைக்கப்போவதில்லை என அறிவித்துள்ளன.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தும், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி தொடர்பாக கிடைத்துள்ள தரவுகள் அதற்கு ஒப்புதல் அளிக்கும் அளவுக்கு போதுமானவையாக இல்லை என்று கூறி அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது.
வட மற்றும் தென் அமெரிக்காவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி சோதனைகள் நடந்துவரும் நிலையில், அவற்றின் முடிவுக்காக காத்திருப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அந்த தரவுகள் கிடைத்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.