புற ஊதா ஒளியில் ஒளிரும் சுவிட்சர்லாந்தின் கடவுச்சீட்டு!
சுவிட்சர்லாந்தின் கடவுச்சீட்டில் உள்ள தனிச்சிறப்புகள் குறித்து இங்கே அறிந்துகொள்ளலாம்.
சுவிட்சர்லாந்தின் பயோமெட்ரிக் கடவுச்சீட்டு உலகிலேயே சக்திவாய்ந்ததும், கண்கவர் அழகுடையதுமானது.
இந்த புதிய கடவுச்சீட்டு புற ஊதாக் கதிர் ஒளியில் (ultraviolet light) மின்னும் தன்மையைக் கொண்டுள்ளது.
இதில் சுவிஸ் நாட்டின் புகழ்பெற்ற இயற்கை காட்சிகளும், பாரம்பரிய கட்டிடக்கலை வடிவங்களும் ஒளிர்ந்து தெரியும்.
ஏன் சுவிட்சர்லாந்தின் கடவுச்சீட்டு UV ஒளியில் மின்னுகிறது?
2022-ல் அறிமுகமான புதிய சுவிஸ் பயோமெட்ரிக் கடவுச்சீட்டு (Switzerland’s biometric passport) பாதுகாப்பு தரங்களை மேம்படுத்துவதுடன், கலைநயத்தையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டது.
Keesing Technologies வெளியிட்ட தகவலின்படி, UV-பாதுகாப்பு கொண்ட காகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டு முறைகேடுகளை தடுப்பது சாத்தியமாகியுள்ளது.
Black UV ஒளியில், இந்த சிறப்பம்சங்கள் வெளிப்பட்டு, கடவுச்சீட்டின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன.
புதிய கடவுச்சீட்டின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்
Newly Swissed மாத இதழின் தகவலின்படி, சுவிஸ் கடவுச்சீட்டு பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது:
- Biometric chip: இந்த கடவுச்சீட்டில் பயணியின் விரல் ரேகை, புகைப்படம், கையொப்பம் போன்ற தகவல்களை சேமிக்கக்கூடிய embedded chip உள்ளது.
- Encrypted data: இதில் உள்ள அனைத்து தகவல்களும் உயர்தர குறியாக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை முறைகேடாக மாற்றுவது கடினம்.
- Digital signature: ஒவ்வொரு கடவுச்சீட்டிற்கும் தனிப்பட்ட டிஜிட்டல் கையொப்பம் உண்டு, இதனை போலியாக உருவாக்க முடியாதது.
- Quick verification: விமான நிலையங்கள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு இடங்களில், குறிப்பிட்ட ஸ்கேனர் மூலம் இந்த கடவுச்சீட்டு விரைவாக சரிபார்க்கப்படுகின்றன.
உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு
பாதுகாப்பு அம்சங்களைத் தாண்டி, சுவிஸ் கடவுச்சீட்டு உலகில் மிகவும் சக்திவாய்ந்தது.
Henley Passport Index பட்டியலின்படி, சுவிஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு விசா தேவையின்றி பயணம் செய்யலாம், இதன் மூலம் உலகின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இது திகழ்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Switzerland biometric passport, UV Light, Switzerland passport