சுவிட்சர்லாந்தில் முட்டை நுகர்வு வரலாறு காணாத அளவிற்கு உயர்வு
சுவிட்சர்லாந்தில் 2024-ஆம் ஆண்டில் முட்டை நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் விவசாயத்திற்கான மத்திய அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த வருடம் மொத்தம் 1.8 பில்லியன் முட்டைகள் விற்பனையாகியுள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் (2023) ஒப்பிடும்போது 5.7 சதவீதம் அதிகமாகும்.
கொரோனா காலத்தில் இருந்த அதிகபட்ச விற்பனை அளவையும் இந்த ஆண்டின் விற்பனை மீறியுள்ளது.
இந்த வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் தனிநபரின் சராசரி நுகர்வில் ஏற்பட்ட உயர்வினால் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2024-ல் ஒரு நபர் சராசரியாக 198 முட்டைகள் எடுத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
விநியோக சவால்கள் இருந்தாலும், ஈஸ்டர் பண்டிகைக்காக தேவையான அளவு முட்டைகள் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், கடைகளில் முட்டை வகைகள் குறைவாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |