சுவிட்சர்லாந்து - இந்தியா இடையிலான உறவுப்பாலம்..தூதரகம் குறித்த தகவல்கள்
சுவிட்சர்லாந்தின் நலன்களை இந்தியாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்கள் குறித்து இங்கே காண்போம்.
புது டில்லி தூதரகம்
இந்தியா மற்றும் பூட்டான் உடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியது சுவிட்சர்லாந்தின் தூதரகம். 
இந்த தூதரகமானது அரசியல், பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள், சட்ட விவகாரங்கள், அறிவியல், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இது சுவிஸின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
மேலும், தூதரகம் மூலம் இந்தியா மற்றும் பூட்டான் முழுவதும் பரந்த பிரதிநிதித்துவ வலையமைப்பை சுவிட்சர்லாந்து பராமரிக்கிறது.
இந்தியாவில் சுவிட்சர்லாந்தின் தூதரகம் புது டில்லியில் அமைந்துள்ளது. மும்பை, பெங்களூரு நகரங்களில் இதன் துணைத் தூதரகங்கள் உள்ளன. 
அதேபோல் கௌரவத் தூதரகங்கள் கொல்கத்தா மற்றும் சென்னையில்உள்ளன. இவை தவிர, சுவிஸ் வணிக மையம் மற்றும் சுற்றுலா அலுவலகம் ஆகியவை மும்பையில் உள்ளன.
சுவிஸ்நெக்ஸ் அலுவலகம் பெங்களூரில் உள்ளது. மேலும், புது டெல்லியில் Pro Helvetia சுவிஸ் கலை மன்றம் ஒன்றும் உள்ளது.
முகவரி: நியாயா மார்க், சாணக்யாபுரி, புது டெல்லி - 110021.
தொலைபேசி எண்: +91 11 4995 9500
ஃபேக்ஸ்: +91 11 4995 9509
தூதரக தொடர்பு: newdelhi@eda.admin.ch
விசா சேவை: newdelhi.visa@eda.admin.ch
தூதரக சேவைகள்: newdelhi@etatcivil@eda.admin.ch
சர்வதேச ஒத்துழைப்பு: newdelhi.ccd@eda.admin.ch
மும்பை துணை தூதரகம்
சுவிட்சர்லாந்திற்குள் நுழைவதற்கும், தங்குவதற்கும் தேவையானவை, நுழைவு விசா விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான நடைமுறை, விசா விண்ணப்ப படிவம் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
ஆனால், 2016 முதல் புதுடெல்லியில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் உள்ள விசா பிரிவு, சுவிட்சர்லாந்திற்கான அனைத்து விசாக்களையும் செயல்படுத்துகிறது. இதனால், மும்பையில் உள்ள சுவிஸ் துணைத் தூதரகம் இனி விசா செயல்பாட்டில் ஈடுபடவில்லை.
எனினும் அடையாள ஆவணங்கள், சிவில் அந்தஸ்து, பதிவு மற்றும் பதிவை நீக்குதல், சிவில் அந்தஸ்து தொடர்பான விடயங்களுக்கு தொடர்புகொள்ளலாம்.
முகவரி: 102 மேக்கர் சேம்பர்ஸ் IV, 10வது தளம் 222, ஜாம்னலால் பஜாஜ் மார்க், நரிமன் பாயிண்ட், மும்பை - 400 021.
பொது விவகாரங்கள்: mumbai@eda.admin.ch
குடிமை அந்தஸ்து விவகாரங்கள்: mumbai.civilstatus@eda.admin.ch
சுவிஸ் வணிக மைய விவகாரங்கள்: mumbai.sbhindia@eda.admin.ch
கலாச்சார விவகாரங்கள்: mumbai.culture@eda.admin.ch 
பெங்களூரு துணை தூதரகம்
பெங்களூரில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் எந்த தூதரக சேவைகளையும் வழங்குவதில்லை (கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகள், சிவில் அந்தஸ்து விடயங்கள், தூதரகத்தில் பதிவுகள் போன்றவை).
முகவரி: No.26, கிரசென்ட் பார்க் ரெஸ்ட்ஹவுஸ் சாலை, பெங்களூரு-560 001.
தொலைபேசி: +91 80 4941 2000
தூதரக தொடர்பு: bangalore@eda.admin.ch 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |