200 டன் தங்கத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த சுவிட்சர்லாந்து!
சுவிட்சர்லாந்தின் தங்க ஏற்றுமதி ஜனவரியில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவுக்கு சென்ற தங்கத்தின் அளவு 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்து, உலகின் மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு மற்றும் பரிமாற்ற மையமாக உள்ளது.
ஜனவரியில் அமெரிக்காவுக்கு 192.9 டன் தங்கம் (கிட்டத்தட்ட 2 லட்சம் கிலோ) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, இது டிசம்பரில் உள்ள 64.2 டன்னுடன் ஒப்பிடும்போது மூன்றுமடங்கு அதிகம்.
டொனால்ட் ட்ரம்ப், புதிய இறக்குமதி வரிகளை அறிவிக்கத் தயாராக இருப்பதனால், தங்கப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இதனால், அமெரிக்காவின் Comex தங்க பங்குகளில் 116% உயர்வு ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக, சுவிட்சர்லாந்து 225.4 டன் தங்கம் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், சீனா (200 கிலோ) மற்றும் இந்தியா (1.6 டன்) போன்ற முக்கிய சந்தைகளுக்கு வர்த்தகம் குறைந்துள்ளது.
லண்டன் சந்தையில் தங்கத்தின் திரவத்தன்மை (liquidity) குறைந்துள்ளதால், விலை வேறுபாடும் அதிகரித்துள்ளது.
இதன் எதிர்விளைவுகள் பொருளாதாரத்திலும் தங்க வர்த்தகத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Swiss Gold, Swiss gold exports, Switzerland gold exports