2025-ல் குடும்பங்களுக்கு பயனுள்ள Golden Visa வழங்கும் சிறந்த 12 நாடுகள்
உலகத்தரம் வாய்ந்த கல்வி, பாதுகாப்பான சூழல் மற்றும் விசா இல்லாமல் பயணம் செய்யும் சுதந்திரம் ஆகியவை பலரின் கனவு. இந்த கனவை நனவாக்க Golden Visa திட்டங்கள் வழிவகுக்கின்றன.
Golden Visa என்பது முதலீட்டின் அடிப்படையில் குடியுரிமை அல்லது வதிவிட அனுமதி வழங்கும் திட்டமாகும்.
2025-ஆம் ஆண்டில் குடும்பத்திற்கேற்ப சிறந்த Golden Visa-வை 12 நாடுகள் வழங்குகின்றன. அவற்றின் விவரங்களை இங்கு காணலாம்.
Golden Visa என்றால் என்ன?
Golden Visa திட்டம் என்பது முதலீடு செய்யும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதி வேக குடியுரிமை அல்லது நீண்ட கால வதிவிட அனுமதி பெறும் திட்டமாகும்.
முதலீட்டு வகைகள் - சொத்து வாங்குதல், தொழில் முதலீடு, அல்லது அரசுத் திட்டங்களுக்கு நிதியுதவி ஆகியவற்றாக இருக்கலாம்.
Golden Visa - குடும்பத்திற்கான முக்கியமான நன்மைகள்
- முழு குடும்பத்திற்கும் அனுமதி: மனைவி, பிள்ளைகள் மற்றும் சில நாடுகளில் பெற்றோர்களும் இந்த திட்டத்தில் சேரலாம்.
- நீண்ட கால குடியுரிமை வாய்ப்பு: சில நாடுகளில் 5-10 ஆண்டுகளில் முழு குடியுரிமை பெறலாம்.
- உயர்தர கல்வி மற்றும் மருத்துவ வசதிகள்: குழந்தைகளுக்கான உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் இலவச மருத்துவ சேவைகள்.
- சுதந்திரமான பயணம்: பல நாடுகளின் Golden Visa திட்டங்கள் Schengen நாடுகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கின்றன.
2025-ஆம் ஆண்டில் சிறந்த 12 Golden Visa நாடுகள்
1. போர்ச்சுகல் (Portugal)
- முதலீடு: €280,000 - €500,000 மதிப்புள்ள ரியல் எஸ்டேட், தொழில் அல்லது வேலை உருவாக்கம் முதலீடு
- நன்மைகள்: 5 ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம், Schengen பயண அனுமதி
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, பிள்ளைகள், பொருளாதாரம் சார்ந்த பெற்றோர்கள்
2. ஸ்பெயின் (Spain)
ஸ்பெயினில் வரும் ஏப்ரல் 3, 2025 வரை மட்டுமே Golden Visa திட்டம் உள்ளது.
- முதலீடு: €500,000 மதிப்புள்ள ரியல் எஸ்டேட், வணிகம் அல்லது அரசாங்க பத்திரங்கள் மீது முதலீடு
- நன்மைகள்: Schengen பயண அனுமதி, 10 ஆண்டுகளில் குடியுரிமை
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள்
3. கிரீஸ் (Greece)
- முதலீடு: €250,000 மதிப்புள்ள ரியல் எஸ்டேட் அல்லது தொழில் முதலீடு
- நன்மைகள்: நிரந்தர குடியுரிமை, Schengen பயண சுதந்திரம்
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, 21 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், பெற்றோர்கள்
4. மால்டா (Malta)
- முதலீடு: €300,000 மதிப்புள்ள சொத்து, அரச உதவித் தொகை அல்லது அரசாங்க பத்திரங்கள் மீது முதலீடு
- நன்மைகள்: குடியுரிமை, EU பயண அனுமதி, வரிச் சலுகைகள்
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் நிதி ரீதியாக சார்ந்திருக்கும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி
5. இத்தாலி (Italy)
- முதலீடு: €250,000 முதல் €500,000 வரையிலான தொழில் முதலீடு
- நன்மைகள்: Schengen பயண அனுமதி, சிறந்த கல்வி மற்றும் மருத்துவம்
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, குழந்தைகள் மற்றும் சார்ந்திருக்கும் பெற்றோர்
6. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
- முதலீடு: AED 2 மில்லியன் மதிப்புள்ள ரியல் எஸ்டேட், வணிக அமைப்பு அல்லது பொது முதலீடுகள்
- நன்மைகள்: 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கும் விசா
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (படித்தால் 25 வயது வரை)
7. சைப்ரஸ் (Cyprus)
- முதலீடு: €300,000 மதிப்புள்ள ரியல் எஸ்டேட், வணிக முதலீடு
- நன்மைகள்: குடியுரிமைக்கான பாதையைக் கொண்ட குடும்பங்களுக்கு நிரந்தர வதிவிடம்
- குடும்ப உறுப்பினர்கள்: வாழ்க்கைத் துணை, 25 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நிதி சார்ந்திருக்கும் பெற்றோர்
8. துருக்கி (Turkey)
- முதலீடு: $400,000 மதிப்புள்ள ரியல் எஸ்டேட், வணிக முதலீடு
- நன்மைகள்: விரைவான குடியுரிமை, பல நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதி
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகள்
9. கரிபியன் நாடுகள் (St. Kitts & Nevis, Dominica, Antigua & Barbuda)
- முதலீடு: $100,000+ அரசாங்க நன்கொடைகள், ரியல் எஸ்டேட் அல்லது வணிக முதலீடுகள்
- நன்மைகள்: 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத பயண அனுமதியுடன் குடியுரிமை
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள் (திட்டத்தின் அடிப்படையில் மாறுபடும்)
10. கனடா (Quebec Immigrant Investor Program)
- முதலீடு: CA$1.2 மில்லியன் வணிக அல்லது அரசாங்க ஆதரவு முதலீடு
- நன்மைகள்: நிரந்தர குடியுரிமை, இலவச கல்வி மற்றும் மருத்துவ வசதி
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, 22 வயதிற்குட்பட்ட பிள்ளைகள்
11. அவுஸ்திரேலியா (Significant Investor Visa)
- முதலீடு: AU$2.5 மில்லியன் முதலீடு
- நன்மைகள்: குடியுரிமை வாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவ வசதியுடன் சிறந்த வாழ்க்கை தரம்
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, பிள்ளைகள்
12. நியூசிலாந்து (Investor Visa)
- முதலீடு: NZ$3 மில்லியன் மதிப்புள்ள ரியல் எஸ்டேட், வணிக முதலீடு
- நன்மைகள்: நீண்ட கால குடியுரிமை, உயர் தர வாழ்க்கை
- குடும்ப உறுப்பினர்கள்: மனைவி, 24 வயதிற்குட்பட்ட பிள்ளைகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |