மதுரோவின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கிய சுவிட்சர்லாந்து
வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான, சுவிஸ் நாட்டில் உள்ள அனைத்துச் சொத்துக்களையும் முடக்கியுள்ளதாக ஆளும் ஃபெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு
வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகரத்திற்கு நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் மாற்றப்பட்டதைத் தொடர்ந்தே சுவிஸ் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
— Associated Press
வெளியான அறிக்கையில், உடனடியாக அமுலுக்கு வரும் மற்றும் நான்கு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் இந்த நடவடிக்கை, சட்டவிரோதமான சொத்துக்கள் வெளியேறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும்,
இது 2018 முதல் வெனிசுலா மீது விதிக்கப்பட்ட ஏற்கனவே உள்ள தடைகளுடன் கூடுதலாக இணைக்கப்படுறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சொத்து முடக்கம் தற்போதைய வெனிசுலா அரசாங்க உறுப்பினர்களைப் பாதிக்காது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கண்டறியப்படும் எந்தவொரு நிதியையும் வெனிசுலா மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் திருப்பித் தர முயற்சிப்போம் என்றும் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேலும், வெனிசுலாவில் நிலைமை நிலையற்றதாக இருப்பதாகவும், வரும் நாட்களிலும் வாரங்களிலும் பல்வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஃபெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவின் தற்போதைய இந்தச் சூழ்நிலையை ஃபெடரல் கவுன்சில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், பதற்றத்தைத் தணித்து நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது; அதே நேரத்தில், அமைதியான தீர்வைக் காண்பதற்காகத் தனது நல்லெண்ண முயற்சிகளையும் ஃபெடரல் கவுன்சில் முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
--- Reuters
சொத்துக்களை முடக்கியது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், அது வெளிநாட்டு அரசியல் செல்வாக்குள்ள நபர்களான மதுரோ மற்றும் அவரது உறவினர்கள், நெருக்கமானவர்களுக்குப் பொருந்தும் என்றும் சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், சுவிட்சர்லாந்தில் உள்ள மதுரோவின் சொத்துக்கள் தொடர்பில் தரவுகள் எதையும் சுவிஸ் நிர்வாகம் வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |