புடின் கைது செய்யப்படாமல் பாதுகாப்பு வழங்குவதாக சுவிஸ் அறிவிப்பு
புடின் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்போது, அவர் கைது செய்யப்படாமல் பாதுகாப்பு வழங்குவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கைது செய்யப்படாத வகையில் பாதுகாப்பு (Immunity) வழங்க சுவிட்சர்லாந்து தயாராக உள்ளது.
சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் (Ignazio Cassis), ஜெனீவாவில் நடைபெறவுள்ள அமைதி பேச்சுவார்த்தைகளுக்காக மட்டும் இந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தனிப்பட்ட பயணங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தினார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் புடின் இடையே நேரடி சந்திப்பு ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடையே சுவிட்சர்லாந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகள் சேர்ந்து இந்த சந்திப்பை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
உக்ரைன் மீதான படையெடுப்பில், போர் குற்றங்களுக்காக புடின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
சுவிட்சர்லாந்து, ICC உறுப்பினராக இருப்பதால் சட்டப்படி புடினை கைது செய்ய வேண்தியா கட்டாயம் உள்ளது.
இருப்பினும், அமைதி பேச்சுவார்தைகளுக்காக சிறப்பு விதிவிலக்கு வழங்க சாத்தியம் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Switzerland Putin immunity, Ukraine Russia peace talks, ICC arrest warrant Putin, Geneva peace summit, Zelensky Putin meeting, Russia Ukraine war diplomacy, Switzerland ICC exception, Trump Ukraine peace efforts