உலகின் தலைசிறந்த நாடு சுவிட்சர்லாந்து! தரவரிசையில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
2024ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நாடுகளின் தரவரிசையில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகின் சிறந்த நாடு
சமீபத்தில் US News & World Report நடத்திய உலகின் தலைசிறந்த நாடுகள் தரவரிசை 2024ல் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
தரவுகளின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த தரவரிசையில் முதலிடத்தை பிடித்து வருகிறது.
வாழ்க்கை சூழல், தொழில் தொடங்குதல், பாரம்பரியம், சாகசம் ஆகிய 10 வெவ்வேறான துணை தரவுகளை அளவுகோலாகக் கொண்டு உலக பார்வை கொண்ட 89 நாடுகள் இதில் உட்படுத்தப்பட்டன.
அதில், சுவிட்சர்லாந்து வாழ்வதற்கான சூழ்நிலை, தொழில் தொடங்குதல் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்று 7வது முறையாக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து கணக்கெடுப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தரவரிசை பட்டியலில் சுவிட்சர்லாந்தை தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
இந்தியா இந்த ஆண்டு தரவரிசையில் 33வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 3 இடங்களை இழந்துள்ளது.
இந்தியா அதன் பாரம்பரியத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது, அதே சமயம் சமூக நோக்கம் மற்றும் சாகசம் ஆகியவற்றில் மோசமான மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தரவரிசையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(17) மற்றும் கத்தார்(25) ஆகிய இரண்டு மத்திய நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |