சுவிஸில் அமுலுக்கு வரும் புதிய விதி! கசிந்த முக்கிய தகவல்
சுவிஸில் திங்கட்கிழமை முதல் பார்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சில தனியார் நிகழ்வுகளுக்கு செல்ல கோவிட் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிஸில் தொற்று பாதிப்பு குறைந்த வந்த நிலையில் கோவிட் சான்றிதழை மீண்டும் கட்டாயமாக்கும் திட்டத்தை அரசு தள்ளிவைத்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக சுவிஸில் ஐசியூ-வில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
செப்டம்பர் 7ம் திகதி மதிப்பீட்டின் படி தேசியளவில் சுமார் 87% ஐசியூ படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை செப்டம்பர் 8ம் தேதி கொவிட் சான்றிதழ் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திங்கள் முதல் கொரோனா வைரஸ் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என்று சுவிட்சர்லாந்தின் BLICK செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.
செவ்வாய்க்கிழமை காலை சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தனது அறிக்கையை மத்திய கவுன்சிலிடம் சமர்ப்பித்ததை மேற்கோள் காட்டி BLICK தகவல் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பில் அரசு புதன்கிழமை முடிவு எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்பார்த்தபடி இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டால், உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார வசதிகள் மற்றும் தனியார் விருந்துகளின் உட்புறப் பகுதிகளில் நுழைய கோவிட் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும்.
பாதுகாப்பு தேவைகேற்ப பணியிடங்களில் கூட கோவிட் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என BLICK தகவல் தெரிவித்திருக்கிறது.