ஐரோப்பிய ஒன்றியத்தின் ராணுவ ஒத்துழைப்பு திட்டத்தில் இணையும் சுவிட்சர்லாந்து
ரஷ்யா எதிர்பாராத நேரத்தில் உக்ரைனை ஊடுருவிய விடயம், பல நாடுகளில் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை உருவாக்கியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அதைத் தொடர்ந்து, நேட்டோ போன்ற அமைப்புகளுடன் இணைந்திருப்பது தங்களுக்கு பாதுகாப்பைத் தரும் என்ற முடிவுக்கு பல சிறிய நாடுகள் வந்துவிட்டன.
அவ்வகையில், சுவிட்சர்லாந்தும் தனது பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
ராணுவ ஒத்துழைப்பு திட்டத்தில் இணையும் சுவிட்சர்லாந்து
அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ராணுவ ஒத்துழைப்பு திட்டத்தில் இணைய சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
EU ‘Military Mobility’ project என்னும் அந்த திட்டம், நட்பு நாடுகளின் ராணுவங்கள், சுவிட்சர்லாந்து வழியாக பயணிப்பதை எளிதாக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ராணுவ இயக்க திட்டம் என அழைக்கப்பட்டாலும், உண்மையில் இத்திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டும் இல்லை. அமெரிக்கா, கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளும் இத்திட்டத்தில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |