வெள்ளை பனி போர்த்தப்பட்ட இயற்கையின் பேரழகு சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து என்றதுமே சட்டென நம் அனைவரின் நினைவுக்கும் வருவது வெள்ளை பனி போர்த்தப்பட்ட ஆல்ப்ஸ் மலை தான்.
பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையின் அழகை கண்டுரசிக்கவே நிச்சயம் சுவிட்சர்லாந்துக்கு பயணிக்கலாம்.
மலைகள், ஏரிகள், பாரம்பரிய கட்டிடங்கள், நவீன வடிவமைப்பு, சொக்லேட், சீஸ் என சுவிட்சர்லாந்தின் அருமையை விளக்கிக் கொண்டே போகலாம்.
இந்த பதிவில் சுவிட்சர்லாந்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Pilatus Luzern
பசுமையான மழைகளால் சூழப்பட்ட லுசர்ன் நகரம் சுவிட்சர்லாந்தின் அழகை மெருகூற்றுகிறது.
நடைப்பயணமாக இயற்கையை வர்ணித்தப்படி இங்கு சுற்றிவரலாம். குறிப்பாக சாகச விரும்பிகள் Pilatus மலையை நிச்சயம் காண வேண்டும், dragon mountain என்றழைக்கப்படும் இந்த இடத்தை பேருந்து அல்லது ரயில் பயணத்தின் மூலம் அடையலாம்.
உச்சியில் இருந்தபடியே ஆல்ப்ஸின் அழகையும், நகரின் அழகையும் ரசிப்பதும் சுகம் தானே!
Lake Zurich
சுவிட்சர்லாந்தின் மிக பிரபலமான இடமான Lake Zurichல் ஏராளமான நீச்சல் இடங்கள் அமைந்திருக்கின்றன.
40 கி.மீ நீளம் கொண்ட இந்த ஏரி Rapperswil மற்றும் Hurden இடங்களை மரப்பாலம் மூலம் இணைக்கிறது.
படகு பயணத்தின் மூலம் பாரம்பரியமிக்க இடங்களை காணலாம்.
Chapel Bridge
ஐரோப்பாவின் மிகப்பழமையான பாலமாக கருதப்படுகிறது, 14ம் நூற்றாண்டுகளில் இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்றும், நகர கோட்டைகளின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என அறியப்படுகிறது.
17ம் நூற்றாண்டுகளில் சுவிட்சர்லாந்து மற்றும் லுசர்னின் வரலாற்றை தாங்கி நிற்கிறது.
கடந்த 1993ம் ஆண்டு தீ விபத்தால் சேதமடைய, புதுப்பிக்கப்பட்டு 1994ம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Chateau de Chillon
ஜெனிவா ஏரி கரையின் பாறையில் அமையப்பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடம் இதுவாகும்.
13ம் நூற்றாண்டில் இருந்து சுவிட்சர்லாந்தின் பழமையை தாங்கி நிற்கும் இக்கோட்டை மிக அதிகம் பார்க்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.
ஐரோப்பாவிலேயே அதிகம் பாதுகாப்பட்ட கோட்டையும் இதுவே.
Rhine Falls
ஐரோப்பாவின் மிக நீளமான நீர்வீழ்ச்சி, 150 மீட்டர் அகலத்தில் 23 மீட்டர் வேகத்தில் நீரானது பாய்கிறது.
மத்திய ஐரோப்பாவின் கண்கவர் நீர்வீழ்ச்சியாக இருந்தாலும், இதன் மேல்பகுதி வடக்கு சுவிட்சர்லாந்தின் Schaffhausenல் உள்ளது.
நீர்வீழ்ச்சியின் தெற்கு பகுதி ஒட்டுமொத்த அழகையும் கண்டு ரசிக்க சிறப்பான இடமாகும்.
Mt. Rigi
மூன்று ஏரிகள் சந்திக்கும் கம்பீரமான அமைப்புடன் சுவிட்சர்லாந்தின் மிக பிரபலமான மலை இதுவே.
கேபிள் கார் அல்லது cog railwayயின் மூலம் இந்த இடத்தை அடையலாம், ஆல்பைன் சிகரங்களின் பரந்த காட்சியை காணலாம்.
இதுதவிர உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் என்ற சாதனைக்கு சொந்தமான சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிப்பது மிக சிறந்த அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.