F-35A போர் விமானங்களை வாங்கும் சுவிட்சர்லாந்து: விலையில் கெடுபிடி காட்டும் அமெரிக்கா!
அமெரிக்காவிடம் இருந்து F-35A போர் விமானத்தை சுவிட்சர்லாந்து வாங்க திட்டமிட்டுள்ளது.
F-35A போர் விமானம்
செலவினங்கள் அதிகமாக இருந்தாலும், அமெரிக்காவிடம் இருந்து F-35A போர் விமானத்தை வாங்கும் திட்டத்தை தொடர்வதாக புதன்கிழமை சுவிட்சர்லாந்து உறுதிப்படுத்தியுள்ளது.
6 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் விமானம் தயாரிப்புக்கான கூடுதல் செலவுகளுக்கான 650 மில்லியன் முதல் 1.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை சுவிஸ் ஏற்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு காரணமாக ஒப்பந்தத்தில் தேக்க நிலை ஏற்பட்டது.
தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்று சுவிஸ் பெடரல் கவுன்சில் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், தொழில்நுட்ப முன்னுரிமை காரணமாக F-35A விமானங்களை வாங்கும் திட்டத்தை சுவிஸ் பெடரல் தொடர உள்ளது.
சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை ஒப்பந்தத்திற்கான நிலையான விலையை விரும்புவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால் 2027 ம் ஆண்டு முதல் விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் விமானம் வாங்கும் திட்டம்
கடந்த 2020ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்புக்கு பிறகு போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.
Airbus, Dassault மற்றும் Boeing ஆகிய நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை பிறகு ஜூன் 2021ம் ஆண்டு F-35A போர் விமானத்தை வாங்க திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |