தடை விதிக்கமாட்டோம்... ரஷ்யா தொடர்பில் சுவிஸ் திட்டவட்டமாக அறிவிப்பு
சுவிட்சர்லாந்து தனது பிரதேசத்தில் ரஷ்ய ஊடகங்களை தடை செய்யாது என்று அந்நாட்டு அரசாங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து 30வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுக்கும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
பொருளாதார தடைகளால் ரஷ்யா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
உக்ரைனில் மனிதாபிமான உதவி பெற வரிசையில் காத்திருந்த மக்கள் மீது ராக்கெட் தாக்குதல்!
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முதல் தயக்கம் காட்டிய சுவிஸ், பின் ஐரோப்பிய நாடுகள் விதித்த பெரும்பாலான தடைகளை விதிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக் மற்றும் ஆர்டி-யை சுவிட்சர்லாந்து தனது பிரதேசத்தில் தடை செய்யாது என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
சில ரஷ்ய ஊடகங்களான ஸ்புட்னிக் மற்றும் ரஷ்யா டுடே ஆகியவற்றின் ஒளிபரப்பை இடைநிறுத்துவதற்கு மார்ச் 1 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்த நடவடிக்கையை அமுல்படுத்த வேண்டாம் என்று சுவிஸ் பெடரல் கவுன்சில் முடிவு செய்துள்ளது என்று கவுன்சில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.