உக்ரைனில் மனிதாபிமான உதவி பெற வரிசையில் காத்திருந்த மக்கள் மீது ராக்கெட் தாக்குதல்!
உக்ரைனில் மனிதாபிமான உதவி பெற வரிசையில் காத்திருந்த மக்கள் மீது ராக்கெட் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தின் வீடியோவை உக்ரைனின் குடிமை உரிமைகளுக்கான மையத்தின் தலைவர் Oleksandra Matviichuk தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கார்கிவ் குடியிருப்பாளர்கள் மனிதாபிமான உதவியைப் பெற்றுக் கொண்டிருந்த கார்கிவில் உள்ள நோவா போஷ்டா அஞ்சல் துறை அலுவலகம் மீது ரஷ்யர்கள் தாக்குதல் நடத்தினர்.
வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ராக்கெட் தாக்கியது என வீடியோவுடன் Oleksandra Matviichuk பதிவிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில், உதவி பெற மக்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கும் போது, ராக்கெட் ஒன்று தாக்குகிறது.
இதனையடுத்து, மக்கள் அனைவரும் தெறித்து ஓடும் காட்சியை வீடியோ காட்டுகிறது.
ஐரோப்பிய நாடு மீது புடின் அணு ஆயுத தாக்குதலை நடத்தக்கூடும்! முன்னாள் நேட்டோ தளபதி எச்சிரிக்கை
உக்ரைன் மீது தொடர்ந்து 30வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டு தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
Russians fired on the Nova Poshta postal department in Kharkiv, where Kharkiv residents were receiving humanitarian aid. Here the video of a rocket hitting a crowd of civilians in line#RussiansWarCrimes pic.twitter.com/BvszqcI0s1
— Oleksandra Matviichuk (@avalaina) March 25, 2022
இதனிடையே, குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், கார்கிவில் மக்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் உக்ரைனின் குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.