ஐரோப்பிய நாடு மீது புடின் அணு ஆயுத தாக்குதலை நடத்தக்கூடும்! முன்னாள் நேட்டோ தளபதி எச்சிரிக்கை
ஐரோப்பிய நாடும், நேட்டோ உறுப்பினர் நாடான போலந்து மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என முன்னாள் நேட்டோ தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 30வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதற்கு மத்தியில் ஜெனரல் வெஸ்லி கிளார்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜெனரல் வெஸ்லி கிளார்க் கூறியதாவது, ரஷ்ய தலைவர் நேட்டோவைத் தடுக்க குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுதத்தை பயன்படுத்தக்கூடும்.
உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா! வெளியான வீடியோ ஆதாரம்
அநேகமாக உக்ரைனில் இருக்காது, ஆனால் ஒருவேளை ராணுவ படைகள் இருக்கும் பகுதியில் அல்லது போலந்தில் சில மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கலாம்.
ரஷ்ய நடவடிக்கைகளில் இது வழக்கமான ஒன்று தான்.
எதிர் தரப்பினருக்கு நேட்டோ அளிக்கும் ஆதரவின் காரணமாக ரஷ்யா தோற்கத் தொடங்கினால், அவர்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்துவார்கள்.
இதன் விளைவாக அணு ஆயுத போர், 3ம் உலகப் பேராக மாறும் என கூறி நேட்டோ பின்வாங்கும் என முன்னாள் நேட்டோ தளபதியான ஜெனரல் வெஸ்லி கிளார்க் கூறியுள்ளார்.