அவுஸ்திரேலியாவில் அதிகாலையில் நடந்த அடுத்தடுத்த பயங்கரம்: தப்பியோடிய நபர் அதிரடி கைது
அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உள்பட 4 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
சிட்னியின் புறநகர் பகுதியான Engadine-னில் ஏற்பட்ட கார் விபத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் காவல் அமைச்சர் Yasmin Catley, இந்த கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னி இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சிக்கலான கத்திக்குத்து தாக்குதலின் தொடர்ச்சியை சேர்க்கிறது.
சந்தேக நபர் கைது
இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நபர் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் தொடர்பான கூடுதல் அச்சுறுத்தல்கள் இல்லை என்பதையும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |