அறிமுக இந்திய படத்திற்கு ரூ 530 கோடி சம்பளம்! யார் அந்த நடிகை?
அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்கு இந்திய மதிப்பில் ரூ.530 கோடி ஊதியம் பெறுவதாக வெளியான தகவல் தீயாய் பரவி வருகிறது.
சிட்னி ஸ்வீனி
அமெரிக்காவில் மிகவும் பிரபலமானவர் 28 வயது சிட்னி ஸ்வீனி (Sydney Sweeney). இவர் 2009யில் Heroes என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.
பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் படங்களிலும் நடித்து வருகிறார். Euphoria போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாராட்டப்பட்ட வேடங்கள் மூலம் சிட்னி ஸ்வீனி புகழ்பெற்றார்.
இந்த நிலையில் இந்தி திரைப்பட உலகில் இருந்து சிட்னி ஸ்வீனிக்கு நடிப்பதற்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு பேசப்பட்ட ஊதியம்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, சிட்னி ஸ்வீனிக்கு ஒரு தயாரிப்பு நிறுவனம் 45 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.530 கோடி) ஒப்பந்தத்தை வழங்கியதாக தி சன் ஊடகத்தின் செய்தியின் மூலம் தெரிய வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |