ஐ.நா. பொதுச்சபையில் Instagram reels பார்த்துக்கொண்டிருந்த சிரியா ஜனாதிபதி
Syria president scrolls Instagram reels at UNGA: ஐ.நா. பொதுச்சபையில் சிரியா ஜனாதிபதி Instagram reels பார்த்துக்கொண்டிருந்த வீடியோ வைரலாகிவருகிறது.
reels பார்த்துக்கொண்டிருந்த சிரியா ஜனாதிபதி
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) கூட்டத்தில், சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா (Ahmed al-Sharaa), துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) உரையாற்றும் நேரத்தில் தனது கைப்பேசியில் Instagram-இல் வீடியோக்களை (Reels) ஸ்க்ரோல் செய்த காட்சி கமெராவில் பதிவானது.
The President of Syria, Ahmed al-Sharaa, was on INSTAGRAM during Turkey’s United Nations Speech pic.twitter.com/dVISQOwZYe
— Ryan Rozbiani (@RyanRozbiani) September 22, 2026
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. பலரும், இது மிகவும் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய (relatable) தருணமாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.
“அவர் நம்மில் ஒருவரைப் போலவே, சலிப்பான உரையை கேட்காமல் Instagram-ல் doomscrolling செய்கிறார்” என்று நகைச்சுவையாக பதிவிட்டனர்.

சில ஊடகங்கள், அல்-ஷரா Instagram Reels-ஐ பகிர்ந்ததாகவும் கூறின. ஆனால், வீடியோவில் அவர் பார்த்தது என்ன, பகிர்ந்தாரா என்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அல்-ஷரா தனது உரையை வழங்கினார்.
அவர், இஸ்ரேல் சிரியா நிலப்பரப்பில் உருவாக்கிய “பாதுகாப்பு மண்டலத்திலிருந்து” விலக வேண்டும். அதுவே இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கு முதல் படியாகும் என்று தெரிவித்தார். மேலும், “கோலான் மலைப்பகுதி சிரியாவின் நிலம். இதில் விவாதமே தேவை இல்லை” என்று தெரிவித்தார்.
அல்-ஷரா, அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களுடனும் சந்தித்து, சிரியாவின் மறுசீரமைப்பு, பிராந்திய பிரச்சினைகள், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சிரியாவின் புதிய தலைமையகம் உலக அரங்கில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளின் நடுவே இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |